செய்திகள்

இந்த உலகில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன்: கார் விபத்து குறித்துப் பேசிய ரிஷப் பந்த்!

DIN

கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும் இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் பந்த் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்த ரிஷப் பந்த் தற்போது குணமடைந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை அவர் வழிநத்துவார் எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கார் விபத்தில் சிக்கியபோது முதல் முறையாக இந்த உலகத்தில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். விபத்து ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து நான் அறிந்திருந்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய அளவில் பயப்படும் படியான அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை. யாரோ ஒருவர் என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயங்களிலிருந்து குணமடைய எவ்வளவு நாள்கள் ஆகும் எனக் கேட்டதற்கு, 16-18 மாதங்கள் ஆகும் என மருத்துவர் கூறிவிட்டார். காயத்திலிருந்து மீண்டு வரும் காலங்கள் கடினமாக இருக்கப்போகிறது எனத் தெரிந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 படங்களுக்குமேல் நடிப்பேன் என நினைக்கவில்லை: 100-ஆவது பட விழாவில் மனோஜ் பாஜ்பாயி!

ராயன் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன்!

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

SCROLL FOR NEXT