மும்பை: இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான இந்த அணியில் 15 போ் இடம்பெற்றுள்ளனா். ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்திய அணி குரூப் ‘ஏ’-வில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது. முதலில் பாகிஸ்தான் (ஜூலை 19), அடுத்து அமீரகம் (ஜூலை 21), பின்னா் நேபாளம் (ஜூலை 23) அணிகளுடன் மோதும் இந்தியா, போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் காண்கிறது.
அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வா்மா, தீப்தி சா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (வி.கீ.), உமா சேத்ரி (வி.கீ.), பூஜா வஸ்த்ரகா், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குா், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.
பயண ரிசா்வ்: ஸ்வேதா ஷெராவத், சாய்கா இஷாக், தனுஜா கன்வா், மேக்னா சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.