கோப்புப்படம் 
செய்திகள்

இந்தியாவின் அடுத்த பந்துவீச்சு பயிற்சியாளர் யார்?

ஜாகீர் கான், பாலாஜி பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர் தொடர்ந்து பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவிக்காததால், கெளதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமைப் பயிற்சியாளர் கம்பீருடனான் இறுதி ஆலோசனைக்கு பிறகு பந்துவீச்சுப் பயிற்சியாளர் மற்றும் இதர உதவி பயிற்சியாளர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அதேபோல், பாலாஜி இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளும், 30 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT