இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
முத்தையா முரளிதரன், இலங்கை - 800 விக்கெட்டுகள்
ஷேன் வார்னே, ஆஸ்திரேலியா - 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து - 704 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே, இந்தியா - 619 விக்கெட்டுகள்
ஸ்டுவர்ட் பிராட், இங்கிலாந்து - 604 விக்கெட்டுகள்
கிளன் மெக்ராத், ஆஸ்திரேலியா - 563 விக்கெட்டுகள்
நாதன் லயன், ஆஸ்திரேலியா - 530 விக்கெட்டுகள்
கோர்ட்னி வால்ஸ், மே.இ.தீவுகள் - 519 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியா - 516 விக்கெட்டுகள்
டேல் ஸ்டெயின், தென்னாப்பிரிக்கா - 439 விக்கெட்டுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.