யுவராஜ் சிங்  படம் | யுவராஜ் சிங் (எக்ஸ்)
செய்திகள்

மிகச் சிறந்த பந்துவீச்சாளரை கிரிக்கெட் உலகம் இழந்துவிட்டது: யுவராஜ் சிங்

ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் மூலம் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

DIN

ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் மூலம் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், எதிர்கால பயணத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஜேம்ஸ் ஆண்டர்சனைப் போன்ற வீரர்கள் தினமும் உருவாவதில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டதன் மூலம், உலக கிரிக்கெட் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரை இழந்துள்ளது. மிகவும் துல்லியமாக பந்தினை ஸ்விங் செய்யும் உங்களது திறமை எங்களது காலத்தில் உங்களை மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக மிளிரச் செய்தது.

கையில் பந்தினை வைத்துக் கொண்டு நீங்கள் முழுவீச்சில் பந்துவீச ஓடிவரும் காட்சிகளை அனைவரும் கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு நகர்ந்துள்ள உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுமென விரும்புகிறேன். உங்களுடன் இணைந்து விளையாடிய தருணங்கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவை. கிரிக்கெட் உலகம் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT