ஜோகோவிச், அல்கராஸ்.  
செய்திகள்

37 வயது, 37ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்! அல்கராஸை பழி தீர்ப்பாரா?

விம்பிள்டன் அரையிறுதியில் வென்று 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார் ஜோகோவிச்.

DIN

இந்தாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 10ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

லண்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் உடன் மோதவிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

அரையிறுதியில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் ஜோகோவிச் மோதினார்.

முதல் செட்டில் 6-4 வென்ற ஜோகோவிச் இரண்டாவது செட்டில் 7 -6 (7-2) செட்டில் போராடி வென்றார். மூன்றாவது செட்டினை 6-4 என எளிதாக வென்றார்.

இதன்மூலம் இறுதிப் போட்டியில் மீண்டும் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச். கடந்தாண்டு விம்பிள்டனில் அல்கராஸ் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜோகோவிச் பழிதீர்ப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி லண்டனில் நடைபெறுகிறது. 37 வயதில் 37ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT