பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பாரிஸ்ஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.
12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய ஆடவர் அணி 2013 புள்ளிகளைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்திய வில்வீரர்கள் பொம்மதேவரா தீரஜ், தருண்தீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ் ஆகியோர் தரவரிசைப் போட்டிகளில் தனிநபர் சுற்றில் போட்டியிட்டு இந்தியாவிற்காக மொத்தம் 2013 புள்ளிகளை சேகரித்தனர்.
தீரஜ் 681 புள்ளிகளுடன் முதலிடமும் மற்றும் தனிநபர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தகுதிச் சுற்றில் 3 ஆம் இடம்பிடித்த இந்திய அணியில் பொம்மதேவரா தீரஜ், தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் ஆகியோர் 2013 புள்ளிகள் பெற்றனர்.
ஆண்கள் வில்வித்தை அணி தரவரிசை
தென் கொரியா - 2049 புள்ளிகள்
பிரான்ஸ் - 2025 புள்ளிகள்
இந்தியா - 2013 புள்ளிகள்
சீனா - 1998 புள்ளிகள்
தனிநபர் வில்வித்தை வீரர் தரவரிசை
பொம்மதேவரா தீரஜ் (681 புள்ளிகள்) - 4 ஆவது இடம்
தருண்தீப் ராய் (674 புள்ளிகள்) - 14 ஆவது இடம்
பிரவின் ஜாதவ் (658 புள்ளிகள்) - 39 ஆவது இடம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.