அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜிம்பாப்வே 56 ரன்கள் முன்னிலை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 25 ) தொடங்கியது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய அயர்லாந்து அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மூர் 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஆண்டி மெக்பிரின் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் முஸர்பானி மற்றும் டாணகா சிவங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சத்தாரா மற்றும் சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 27) ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து அணியைக் காட்டிலும் ஜிம்பாப்வே அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.