இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படவுள்ள இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.
அதேபோல, வருகிற 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ளது. வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட உள்ளது. அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் 50 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அணி போன்றவை பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிகப் பெரிய ஐசிசி தொடர்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் களமாக ஆசிய அணிகளால் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.