படம்: எக்ஸ் / நார்வே செஸ்
செய்திகள்

நார்வே செஸ் பரிசுத்தொகை: கார்ல்செனுக்கு ரூ.54 லட்சம், பிரக்ஞானந்தாவுக்கு எவ்வளவு?

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்செனுக்கு ரூ.54 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

DIN

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார். மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆடவர் பிரிவில் 3ஆவது இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி முறையே 4,5ஆவது இடங்களைப் பிடித்தார்கள்.

நார்வேயின் பண மதிப்பில் 7 லட்சம் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) முதலிடம் பிடித்த கார்ல்செனுக்கு வழங்கப்பட்டது. இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சத்து 60ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆடவர் பரிசுத் தொகை விவரங்கள்:

1.மேக்னஸ் கார்ல்சென் - ரூ.54,60,000

2. ஹிகரு நகமுரா - ரூ. 27,30,000.

3. ஆர். பிரக்ஞானந்தா - ரூ.15,60,000.

4. அலிரீஜா ஃபிரௌஸ்ஜா - ரூ.13,26,000

5. ஃபாபியோனா கரானா - ரூ. 11,70,000

6. டிங் லிரென் - ரூ. 9,36,000.

மகளிர் பரிசுத் தொகை விவரங்கள்:

1.வென்ஜுன் - ரூ.54,60,000

2.முஸிஜுக் - ரூ. 27,30,000.

3.லீ டிங்ஜி - ரூ.15,60,000.

4.வைஷாலி - ரூ.13,26,000

5.ஹம்பி - ரூ.11,70,000

6.கிராம்லிங் - ரூ. 9,36,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

SCROLL FOR NEXT