பாரா தடகள சாம்பியன்ஷிப்: 2 தங்கம் வென்ற செளரப் சர்மா!
ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் நோட்வில் பகுதியில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி ஜூன் 9ஆம் தேதி (இன்றுடன்) முடிகிறது.
இப்போட்டியில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் ரூபா காயா பகுதியைச் சேர்ந்தவர் செளரப் சர்மா இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
155 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
சிறு வயது முதலே விளையாட்டின்மீது ஆர்வம் கொண்ட சர்மா, தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வமுடன் இருந்த செளரப் சர்மாவின், நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாகவும், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்துள்ளதாகவும், அவரின் சகோதரர் விகாஸ் சர்மா தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.