தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 ஆவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 136 ரன்கள் (18 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து அசத்தினார்.
ஷெஃபாலி வர்மா 20 ரன்கள், ஹேமலதா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , ஹர்மன்ப்ரீத் கௌர் 103* (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) ரன்கள், ரிச்சா கோஷ் 25* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மலாபா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணித் தலைவர் லாரா வோல்வார்ட் 135 ரன்களும் (12 பவுண்டரி, 3 சிக்ஸர்), மரிசன்னே காப் 114 ரன்களும் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்), நாடின் கிளார்க் 28 ரன்களும், அன்னேக் போச் 18 ரன்களும் எடுத்தனர்.
தரப்பில் பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிரணி 2-0 என்றக் கணக்கில் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.