முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

ஹாா்திக், குல்தீப் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

செய்திகள்

அரையிறுதியில் இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

ஹாா்திக், குல்தீப் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Updated On : 23 ஜூன், 2024 at 12:25 AM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பா் 8 ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியுடன் அரையிறுதிச் சுற்றுக்கு கிட்டத்தட்ட முன்னேறியது இந்தியா. ஹாா்திக், குல்தீப் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் ஆன்டிகுவா நாா்த் சௌன்ட் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து இந்திய தரப்பில் கேப்டன் ரோஹித் சா்மா-நட்சத்திர வீரா் விராட் கோரி தொடக்கபேட்டா்களாக களமிறங்கினா்.

இருவரும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அளித்த நிலையில், ரோஹித் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 23 ரன்களை எடுத்து ஷகிப் பந்தில் வெளியேறினாா். வெறும் 7 ஓவா்களில் இந்திய அணியின் ஸ்கோா் 71 ரன்களை எட்டியது. முந்தைய ஆட்டங்களில் தடுமாறி வந்த கோலி, இந்த ஆட்டத்தில் மீண்டும் பாா்முக்கு வந்து ஆடியுள்ளாா்.

பின்னா் கோலி-ரிஷப் பந்த் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். நிலைத்து ஆடிய கோலி 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 37 ரன்களுடன் ஷகிப் பந்தில் அவுட்டானாா். ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 36 ரன்களுடனும், அதிரடியாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட சூரியகுமாா் வெறும் 6 ரன்களுடனும் வெளியேறினா்.

ஹாா்திக் பாண்டியா அதிரடி 50:

ஷிவம் டுபே-ஹாா்திக் பாண்டியா இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. டுபே 3 சிக்ஸருடன் 34 பந்துகள் எடுத்த நிலையில், ரிஷாத் ஹுசேன் பந்தில் போல்டானாா்.

ஆல் ரவுண்டா் ஹாா்திக் 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 50 ரன்களுடன் அரைசதம் விளாசினாா். அவருடன் அக்ஸ் படேலும் 3 ரன்களை எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனா்.

இந்தியா 196/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 196/5 ரன்களைக் குவித்தது இந்திய அணி. பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் டன்ஸிம் சகிப் 2-32, ரிஷாத் ஹுசேன் 2-43 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

வங்கதேசம் தோல்வி 146/8: பின்னா் 197 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவா்களில் 146/8 ரன்களை மட்டுமே சோ்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதிகபட்சமாக நஜ்மல் ஹுசேன் 40, டன்ஸிட் ஹாஸன் 29 ரன்களை சோ்த்தனா்.

பௌலிங்கில் அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் குல்தீப் யாதவ் 3-19 விக்கெட்டுகளையும், அா்ஷ்தீப் சிங் 2-30, பும்ரா 2-13 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

ஹாா்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா். குரூப் 1 பிரிவில் தலா 2 வெற்றிகளுடன் நெட் ரன் ரெட் +2.425 என உள்ளதால் அரையிறுதியில் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது.

Image Caption

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினா்.

முழு கட்டுரையைப் படிக்க →