பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ஃப் நட்சத்திர வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஏற்கெனவே இந்தியா சாா்பில் ஆடவா் பிரிவில் சுபாங்கா் சா்மா, ககன்ஜித் புல்லா் ஆகியோா் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
பாரீஸ் ஒலிம்பிக் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. சுபாங்கா், ககன்ஜித் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் இதுவாகும்.
இந்நிலையில் மகளிா் பிரிவில் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் உலகத் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்
உலக தரவரிசையில் முதல் 60 இடங்களில் உள்ளோா் நேரடியாக ஒலிம்பிக் தகுதி பெறலாம். 24-ஆவது இடத்தில் அதிதியும், 40-ஆவது இடத்தில் தீக்ஷாவும் உள்ளனா்.
அதிதி அசோக் மூன்றாவது முறையாகவும், தீக்ஷா இரண்டாவது முறையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனா். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றிருநத்து.