படம் | பிடிஐ
செய்திகள்

இந்தியா-தெ.ஆ. டெஸ்ட் போட்டி: மந்தனா, ஷெஃபாலி வர்மா சதம்!

இந்தியா- தெ.ஆ. மகளிர் டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா சதம் விளாசினர்.

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட், சென்னையில் இன்று தொடங்கியது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதுகின்றன. கடந்த 2014-இல் மைசூரில் இரு அணிகளும் மோதிய டெஸ்ட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதே தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கியது.

சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நிதானப் போக்கை கடைபிடித்தனர். இருவரும் பந்தை நாலாபுறமும் விளாசி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தனர்.

ஷெஃபாலி வர்மா

அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 26 பவுண்டரி, 1 சிக்ஸர் எடுத்து 149 ரன்களிலும், அடுத்துவந்த சதீஷ் சுபா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷெஃபாலி வர்மா 20 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 165* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இந்தியா அணி 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்மிருதி மந்தனா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

தலித் இளைஞரைத் திருமணம் செய்த கர்ப்பிணி மகளைக் கொன்ற தந்தை!

அழகின் ரகசியம் என்ன? - தமன்னா பதில்!

பிரதமர் மோடி வெற்று முழக்கங்களை விட தீர்வுகளை முன்வைக்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி!

SCROLL FOR NEXT