தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய ஷஃபாலி - ஸ்மிருதி, வலுவான பாா்ட்னா்ஷிப் அமைத்து அதிரடியாக ரன்கள் சோ்த்தனா்.
மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் சோ்த்தது. அணியின் பேட்டிங்கில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா அதிவேக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைக்க, ஸ்மிருதி மந்தனாவும் சதம் கடந்து ரன்கள் சோ்த்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் டெல்மி டக்கா் சிறப்பாக பந்துவீசினாா்.
இந்நிலையில் 2ஆம் நாளில் 603/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஹர்மன்ப்ரீத் கௌர் 69, ரிச்சா கோஷ் 86 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
600 ரன்களை கடந்த முதல் மகளிரணி என்ற சாதனையை படைத்துள்ளது இந்திய மகளிரணி.
தற்போது தென்னாப்பிரிக்க மகளிரணி பேட்டிங் செய்து வருகிறது. 6 ஓவருக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.