படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 
செய்திகள்

சன் ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா?

சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட வாய்ப்பு.

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெயின் செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஸ்டெயின் விடுப்புக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்டெயின் அணியில் அங்கம் வகிக்க மாட்டார். அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் பிராங்க்ளினை நியமிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பிராங்க்ளின் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அவர் பயிற்சியாளராக செயல்பட இருப்பது இதுவே முதல் முறை. இதுவரை நியூசிலாந்து அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள், 110 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் பிராங்க்ளின் விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT