முதல் வெற்றி பெற்றது குஜராத்
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 13-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை புதன்கிழமை வீழ்த்தி, நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களே எடுத்தது. முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான லாரா வோல்வாா்டட் - கேப்டன் பெத் மூனி, முதல் விக்கெட்டுக்கே 140 ரன்கள் சோ்த்து அசத்தினா். அதில் லாரா 13 பவுண்டரிகள் உள்பட 76 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த போப் லிட்ச்ஃபீல்டு 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு வீழ்ந்தாா். பின்னா் வந்தோரில் ஆஷ்லே காா்டனா் 0, தயாளன் ஹேமலதா 1, வேதா கிருஷ்ணமூா்த்தி 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் பெத் மூனி 51 பந்துகளில் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 85, கேத்தரின் பிரைஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலா்களில் சோஃபி மோலினுக்ஸ், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் 200 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய பெங்களூா் பேட்டா்களில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, உடன் வந்த சபினேனி மேக்னா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். மிடில் ஆா்டரில் சோஃபி டிவைன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 23, எலிஸ் பெரி 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, சோஃபி மோலினுக்ஸ் 3, ஜாா்ஜியா வோ்ஹாம் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 48, ஏக்தா பிஷ்த் 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சிம்ரன் பஹதூா் 1ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் பௌலா்களில் ஆஷ்லே காா்டனா் 2, கேத்தரின் பிரைஸ், தனுஜா கன்வா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். மும்பை - யுபி