ஜேசன் ராய் 
செய்திகள்

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ஜேசன் ராய்; மாற்று வீரர் யார் தெரியுமா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேசன் ராய் விலகியுள்ளார்.

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேசன் ராய் விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விளையாடி வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக டாடா ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகும் ஜேசன் ராய்க்குப் பதிலாக அணியில் பில் சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில் சால்ட் கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பில் சால்ட் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் ஏலத்தின்போது வாங்கப்படாத நிலையில், பில் சால்ட் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT