செய்திகள்

ரஞ்சி இறுதிப்போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் விதர்பா!

ரஞ்சி இறுதிப்போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ரஞ்சி இறுதிப்போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்ய மும்பை முதலில் பேட் செய்தது.

மும்பை அணி 64.3 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக பிரித்வி ஷா 46 ரன்களும், பூபென் லால்வானி 37 ரன்களும் எடுத்தனர். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஆதித்யா தாக்கரே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டைடு 21 ரன்களுடனும், ஆதித்யா தாக்கரே 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

விதர்பா அணி மும்பையைக் காட்டிலும் 193 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT