அடிப்படைத் தேவைகளுக்கு கூட ஒருவரின் உதவி தேவைப்பட்டது, ஆனால்... ரிஷப் பந்த் குறித்து ஷிகர் தவான்!
ரிஷப் பந்த்தின் நேர்மறையான எண்ணம் அவரை மீண்டும் முழு உடல்தகுதியுடன் கிரிக்கெட் விளையாட செய்துள்ளது.
ரிஷப் பந்த்தின் நேர்மறையான எண்ணம் அவரை மீண்டும் முழு உடல்தகுதியுடன் கிரிக்கெட் விளையாட செய்துள்ளதாக இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட ரிஷப் பந்த் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், ஷிகர் தவான் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் மிகுந்த வலியில் இருந்தார். அவரது அடிப்படைத் தேவைகளைக் கூட அவராக செய்து கொள்ளமுடியவில்லை. விபத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு அவரை கவனித்துக் கொள்ள ஒருவரின் உதவி தேவைப்பட்டது. கழிப்பறைக்கு செல்வதற்கு கூட அவருக்கு ஒருவரின் உதவி தேவைப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த மாதிரியான கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் அவர் மீண்டு வந்துள்ளார். அது மிகப் பெரிய விஷயம். அவர் பல அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.