செய்திகள்

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வின்!

ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவி அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

DIN

ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவி அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின். இந்தப் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன்(36) 3ஆம் இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் முரளிதரன் (67 ), 2ஆம் இடத்தில் ஷேன் வார்னே (37) இருக்கிறார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் அஸ்வின் வார்னேவின் இடத்தினைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மேலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13ஆவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

2ஆம் இடத்தில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டும் 3ஆம் இடத்தில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT