ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன்!
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் குறித்து...
ஐசிசி தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி தரவரிசை டி20 ஆடவருக்கான ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரரைப் பின்னுக்குத் தள்ளி சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே டி20 அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா (39 வயது) ஐசிசி தரவரிசையில் மீண்டும் தனது முதலிடத்தை பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஓமனுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சில் 1 விக்கெட்டும் பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
சிக்கந்தர் ராஸா ஒருநாள் போட்டியின் ஆல்ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசை
1. சிக்கந்தர் ராஸா - 299 புள்ளிகள் (ஜிம்பாப்வே)
2. சைம் ஆயூப் - 282 புள்ளிகள் (பாகிஸ்தான்)
3. ஹார்திக் பாண்டியா - 243 புள்ளிகள் (இந்தியா)
4. ரோஷ்டன் சேஸ் - 224 புள்ளிகள் (மே.இ.தீவுகள்)
5. முகமது நவாஸ் - 221 புள்ளிகள் (பாகிஸ்தான்)
T20 World Cup zimbabwe star Sikandar raza make gains, new No.1 ranked all-rounder.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.