செய்திகள்

இந்தியா திரும்பினார் முகமது ஷமி!

பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.

DIN

பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் குறைவான போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் முகமது ஷமி. ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளும், டெஸ்ட்டில் 229 விக்கெட்டுகளும், ஐபிஎல் போட்டிகளில் 127 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை. கணுக்கால் காயம் காரணமாக ஷமிக்கு லண்டனில் பிப்.27 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முகமது ஷமிக்கு பிரதமர் மோடி விரைவில் நலம்பெற வேண்டுமெனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காயம் காரணத்தினால் ஐபிஎல், டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, “வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தையல் பிரிக்கப்பட்டதாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்த முகமது ஷமி இன்று விமானத்தில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில், “அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்புவதில் ஆசிவதிக்கப்பட்டுள்ளேன். திடமாக உணர்கிறேன். எனது அடுத்த கட்ட பயணத்துக்கு தயாரகவிருக்கிறேன். எனக்கு அன்பு, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT