இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஆக்யூப் ஜாவத் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரை ஆக்யூப் ஜாவத் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்யூப் ஜாவத் பாகிஸ்தான் அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் ஜாவத் அங்கம் வகித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் அணி உலகக் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றபோது அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாவத் இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.