எல்லீஸ் பெர்ரிக்கு, அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக வழங்கிய டாடா நிறுவனம்.  படம்: எக்ஸ் / ஆர்சிபி
செய்திகள்

ஆர்சிபி வீராங்கனைக்கு 'நொறுங்கிய கண்ணாடி'யைப் பரிசளித்த டாடா!

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக பரிசளித்துள்ளது.

DIN

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக பரிசளித்துள்ளது.

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் ‘வெளியேற்றும்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 5 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதற்கு முன்பான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அல்லீஸ் பெர்ரி அடித்த சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை நொறுக்கியது.

இதற்காக அந்த உடைந்த காரின் கண்ணாடியை நினைவுப் பரிசாக டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மேலும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிய ஆர்சி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நேற்றையப் போட்டியில் பேட்டிங்கில் 66 ரன்கள் அடித்த எல்லீஸ் பெர்ரி பௌலிங்கிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகி விருதும் எல்லீஸ் பெர்ரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT