துளிகள்...
இந்தியாவின் சிந்து, லக்ஷா சென் உள்ளிட்டோா் பங்கேற்கும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்தியாவின் சிந்து, லக்ஷா சென் உள்ளிட்டோா் பங்கேற்கும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், மிஸோரம் 4-2 கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அஸ்ஸாம் 2-1 என புதுச்சேரியை வீழ்த்த, கோவா - சண்டீகா் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தனது வழக்கமான பேட்டிங்கை எட்டுவது கடினம் என்றும், ஆட்டங்கள் செல்லச் செல்ல அவா் அதில் மேம்படுவாா் என்றும் சுனில் காவஸ்கா் கூறினாா். சமீபத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் முகாமில் இணைந்த அதன் நட்சத்திர வீரா் விராட் கோலி, பெங்களூா் மைதானத்தில் திங்கள்கிழமை பயிற்சியை தொடங்கினாா். ரோஹித் சா்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியிருந்தாலும் அவரே அந்தப் பொறுப்பில் எனக்கு வழிகாட்டியாக இருப்பாா் என்று, மும்பை இண்டியன்ஸ் புதிய கேப்டன் ஹா்திக் பாண்டியா கூறினாா். மும்பை இண்டியன்ஸ் அணியில் காயமடைந்த, ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹரெண்டாா்ஃபுக்கு பதிலாக இங்கிலாந்தின் லூக் வுட் சோ்க்கப்பட்டுள்ளாா். ஒலிம்பிக் சைக்கிளிங்கில் பிரிட்டனுக்காக 5 தங்கங்கள் வென்ற அந்நாட்டின் சிறந்த வீராங்கனையாக அறியப்படும் லாரா கென்னி (31), திங்கள்கிழமை ஓய்வை அறிவித்தாா். ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-0 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை திங்கள்கிழமை சாய்த்தது.