அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவஹாட்டியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 26 பந்துகளில் 78 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியை விராட் கோலி பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
நேற்று போட்டி நிறைவடைந்த பிறகு, வைபவ் சூர்யவன்ஷியின் தொப்பியில் விராட் கோலி தனது வாழ்த்துகளை எழுதி அவருக்கு இன்ப அதிர்ச்சியளித்தார். டியர் வைபவ், நன்றாக விளையாடினீர்கள் என விராட் கோலி வைபவ் சூர்யவன்ஷியின் தொப்பியில் எழுதி அவரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டையும் விட்டுவைக்கவில்லை. அவரது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார் சூர்யவன்ஷி.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli has praised Vaibhav Suryavanshi, the young Rajasthan Royals player who has been playing aggressively in the ongoing IPL season.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.