ANI
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் மிட்ச் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அஸ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரோன் கிரீன், ஜோஸ் ஹேஷில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கீலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித், மெக்கர்க் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT