படம் | ஐசிசி
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. போட்டியை நடத்துபவர்கள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக, 21-ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் வெவ்வேறு விதமாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்றார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT