ரோஹித் சர்மா  
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவையென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவையென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா மிகவும் சோர்வாக இருப்பதாகவும், டி20 உலகக் கோப்பைக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக அவருக்கு ஓய்வு மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மைக்கேல் கிளார்க் (கோப்புப்படம்)

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சோர்வாக உணர்வார் என நினைக்கிறேன். சிறிது ஓய்வு அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரராக இருப்பதால், அவருக்கு ஓய்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ரோஹித் சர்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்திய அணிக்கு இது நல்ல அறிகுறி. பந்தினை டைமிங் செய்து விளையாடும்போது, அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்றார்.

டி20 உலக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT