படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும்: யூனிஸ் கான்

பாகிஸ்தான் அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தங்களது ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தங்களது ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்வரிசை ஆட்டக்காரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகர் ஸமான் அவர்களது ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும். பவர் பிளே ஓவர்களை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டி20 போட்டிகளில் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். அதேபோல அழுத்தமான சூழல்களில் பந்துவீசுவதற்கு பந்துவீச்சாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

டி20 உலகக் கோப்பைக்கான அணியை பாகிஸ்தான் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT