இந்திய வீரர்கள் படம் | பிசிசிஐ (எக்ஸ்)
செய்திகள்

டி20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா சென்றடைந்த இந்திய வீரர்கள்!

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

DIN

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோஹித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் பலரும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தனர். பிளே ஆஃப் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உள்பட வீரர்கள் சிலரும் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர்.

விராட் கோலி, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணியுடன் இணையத் தயாராகி வருகின்றனர். அவர்கள் விரைவில் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வருகிற ஜூன் 5 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT