இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது வகிக்கும் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதன்மூலம், பயிற்சியாளர் மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டையும் கவனிக்க சரிவர நேரம் கிடைக்கிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாததது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.