பாகிஸ்தான் வீரர்கள் (கோப்புப்படம்) 
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் வெற்றிக்கு யார் முக்கியம்? முன்னாள் வீரர் பதில்!

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கப்போவது யார் என அந்த அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கப்போவது யார் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு பாபர் அசாம் முக்கியமானவராக இருப்பாரென ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் உள்ள அனைத்து வீரர்களும் முக்கியமானவர்களே. ஆனால், கடந்த சில மாதங்களாக விளையாடியப் போட்டிகளை வைத்துப் பார்க்கையில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், ஷகின் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூறினால், கேப்டன் பாபர் அசாமைத் தேர்வு செய்வேன். ஏனென்றால், அவர் அணியின் கேப்டன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். சரியான தருணத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்றார்.

அண்மையில் டி20 உலகக் கோப்பைத் தொடரின் விளம்பரத் தூதர்களில் ஒருவராக ஷகித் அஃப்ரிடி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT