ரிஷப் பந்த் 
செய்திகள்

வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய கார் விபத்து அனுபவம்: ரிஷப் பந்த்

கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

DIN

கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன்பின், அறுவை சிக்ச்சை மேற்கொண்டு மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு ஓராண்டுக்கும் மேலானது. நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினார்.

இந்த நிலையில், கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், ரசிகர்கள் முன்பு விமான நிலையத்துக்கு சக்கர நாற்காலில் செல்வது பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இந்திய வீரர் ஷிகர் தவான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பந்த் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்து என வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. கார் விபத்தில் சிக்கிய பிறகு, நான் உயிருடன் இருப்பேனா என்பதே எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

கடவுள் என் மீது கருணை செலுத்தி என்னைக் காப்பாற்றி விட்டார். என்னால் விமான நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை. சக்கர நாற்கலியுடன் ரசிகர்கள் முன் தோன்றுவது பதற்றமாக இருந்தது. விபத்துக்குப் பிறகு இரண்டு மாதங்களாக என்னால் சரியாக பல் துலக்கக்கூட முடியவில்லை. 6-7 மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT