இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்) Ajit Solanki
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மிக வலிமையானது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மிகவும் வலிமையான அணி என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மிகவும் வலிமையான அணி என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தற்போது தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், காயங்கள் ஏற்படுவதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போதிலும், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மிகவும் வலிமையான அணி என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இயான் மோர்கன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இயான் மோர்கன் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் காயம் ஏற்படுவதை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் போதிலும், இந்திய அணி மிகவும் வலிமையான அணி. அவர்களது பேட்டிங் நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. இளம் வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை நான் தேர்வு செய்திருந்தால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக ஷுப்மல் கில்லை அணியில் எடுத்திருப்பேன்.

அவருடன் இணைந்து நான் விளையாடியிருக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார், எப்படி விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் அணியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்திய அணி அனைத்துத் தொடர்களிலும் விருப்பமான அணியாக இருக்கிறது. ஆனால், அவர்களால் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்களிப்பார்கள் என நினைக்கிறேன். ஷிவம் துபே நன்றாக விளையாடுவார் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT