முகப்பு
செய்திகள்

2025-ல் ஆசிர்வாதம்! இன்ஸ்டா பதிவில் கே.எல்.ராகுல் கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Updated On : 8 நவம்பர், 2024 at 12:54 PM
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி (கோப்புப் படம்)
பகிர்:

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது இந்தியா ஏ அணிக்கான போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ராகுலும், அவரது மனைவி அதியா ஷெட்டியும் அடுத்தாண்டில் குழந்தை பெறவிருப்பதாக, தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

கே.எல்.ராகுலும், பிரபல பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும் 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் ``2025-ல் எங்களுடைய அழகான ஆசிர்வாதம் வரவுள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர். இதன்மூலம், அதியா ஷெட்டி தற்போது கருவுற்றிருப்பதை அவரும், அவருடைய கணவரும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →