தேசிய ஆடவர் ஹாக்கி: காலிறுதியில் தமிழ்நாடு - உ.பி. நாளை மோதல்
சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் குரூப் கற்று ஆட்டங்கள் திங்கள்கிழமையுடன் (நவ. 11) நிறைவடைந்தன.
சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் குரூப் கற்று ஆட்டங்கள் திங்கள்கிழமையுடன் (நவ. 11) நிறைவடைந்தன.
காலிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை (நவ. 13) நடைபெறும் நிலையில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்துடன் மோதுகிறது.
அந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், பஞ்சாப் - மணிப்பூருடனும், ஹரியாணா - மகாராஷ்டிரத்துடனும், கர்நாடகம் - ஒடிஸாவுடனும் விளையாடுகின்றன.
முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்களில், தாத்ரா & நாகர் ஹவேலி சத்தீஸ்கரையும் (3-1), ஹரியாணா மிஸோரத்தையும் (8-)), தெலங்கானா ஹிமாசல பிரதேசத்தையும் (5-4), கோவா - குஜராத்தையும் (6-0), மணிப்பூர் - அஸ்ஸாமையும் (10-0) வீழ்த்தின.