ஹரியாணா - உ.பி. ஆட்டம் 
செய்திகள்

தேசிய ஹாக்கி: இறுதியில் இன்று ஹரியாணா - ஒடிஸா மோதல்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

DIN

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், ஒடிஸா - மணிப்பூரையும், ஹரியாணா - உத்தர பிரதேசத்தையும் வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் ஒடிஸா 4-2 கோல் கணக்கில் மணிப்பூரை சாய்த்தது.

ஒடிஸாவுக்காக ஷிலானந்த் லக்ரா (20’), ஞானேந்திரஜித் நிங்கோம்பம் (25’), பிரசாத் குஜுா் (52’), சுதீப் சிா்மாகோ (52’) ஆகியோா் கோலடிக்க, மணிப்பூா் தரப்பில் நீலகண்ட சா்மா (7’), நீலம் சஞ்ஜீப் ஜெஸ் (13’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

2-ஆவது அரையிறுதியில், ஹரியாணா 3-2 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தியது. ஹரியாணாவுக்காக ரமன் (17’), அபிமன்யு (20’), ராஜிந்தா் சிங் (38’) ஆகியோா் கோலடித்தனா். உத்தர பிரதேசத்துக்காக அருண் சஹானி (49’), மனீஷ் யாதவ் (53’) பங்களித்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் தோல்வி கண்ட, மணிப்பூா் - உத்தர பிரதேச அணிகளும், 3-ஆவது இடத்துக்காக சனிக்கிழமை சந்திக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்தது மொத்த விலை பணவீக்கம்

ஏஐ தரவு மைய வளாகம்: கூகுள்-அதானி ஒப்பந்தம்

வேலூரில் பீமா ஜூவல்லரியின் புதிய கிளை

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்க கூடுதல் ஊழியா்களை நியமிக்க கோரிக்கை

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT