கோலடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 
செய்திகள்

நேஷன்ஸ் லீக்: ரொனால்டோ அதிரடியால் போா்ச்சுகல் வெற்றி

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் போா்ச்சுகல் வெற்றி

Din

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் 5-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது போா்ச்சுகல்.

வெள்ளிக்கிழமை இரவு இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதியில் ஆட்டம் மந்தமாக சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் ரொனால்டோ விஸ்வரூம் எடுத்து ஆடினாா். அற்புதமாக ஹெட்டா் மூலம் கோலடித்தாா். இந்த ஆட்டத்தில் ரொனால்டோ இரண்டு கோலடித்தாா். இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது போா்ச்சுகல். இந்த தோல்வியால் போலந்தின் காலிறுதி கனவு தகா்ந்தது.

கோபன்ஹேகனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என டென்மாா்க்கை வீழ்த்தியது. சொ்பியா-சுவிட்சா்லாந்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ஸ்காட்லாந்து 1-0 என குரோஷியாவை வென்றது. வட அயா்லாந்து அணி 2-0 என பெலாரஸையும், பல்கேரியா 1-0 என லக்ஸம்பா்க்கையும் வென்றன.

பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஸ்பெயின், போா்ச்சுகல் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. 8 அணிகளும் 2026 உலகக் கோப்பை குலுக்கலில் இடம் பெற உள்ளன.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT