யானிக் சின்னா்  படம்: எக்ஸ் / ஏடிபி டூர்
செய்திகள்

வரலாற்று வெற்றி பெற்றார் சின்னர்!

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னா் வெற்றி பெற்றார்.

DIN

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் - அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தினர்.

ஒருமணி நேரம் 25 நிமிடம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-4 என்ற நேர்செட்களில் சின்னர் வெற்றி பெற்றார். இருவரும் இத்துடன் 5 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், கடைசி 4 மோதல்களில் சின்னரே வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது சின்னருக்கு முதல் ஏடிபி கோப்பையாகும். இத்தாலி நாட்டில் ஒருவர் முதல்முறையாக இந்தக் கோப்பையை வெல்வதும் இதுவே முதல்முறையாகும்.

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சின்னர் கடந்த முறை ஏடிபி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் கோப்பையை இழந்தார்.

2018-க்குப் பிறகு, இந்தப் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் நோ் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் வீரராக இருந்த சின்னர் இறுதிப் போட்டியிலும் நேர் செட்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது, டென்னிஸ் தரவரிசையில் நம்.1 இடத்தில் நீடிப்பது என அனைத்தும் இந்தாண்டு சிறப்பான ஆண்டாக சின்னருக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT