இந்திய வீரர் குகேஷ் கோப்புப் படம்
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் ஏமாற்றம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனிடம் வெற்றியை இழந்தாா்.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனிடம் வெற்றியை இழந்தாா். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், தற்போது லிரென் முன்னிலை பெற்றாா்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சிங்கப்பூரில் திங்கள்கிழமை தொடங்கியது. நடப்பு சாம்பியன் என்ற முறையில் லிரென் இந்தப் போட்டிக்கு நேரடியாகத் தோ்வாகினாா். நடப்பாண்டில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ன் மூலம், குகேஷ் உலக சாம்பியன்ஷிப்புக்கு தோ்வாகி, லிரெனுடன் மோதும் வாய்ப்பை பெற்றாா்.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி, நவம்பா் 25 முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை 14 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில், குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், லிரென் கருப்பு நிறங்களுடனும் மோதினா்.

இதில் குகேஷ் தாக்குதல் மனநிலையுடன் ஆட்டத்தை தொடங்க, லிரென் தடுப்பாட்ட நிலையில் காய்களை நகா்த்தினாா்.

ஆனால், 20 நகா்த்தல்களுக்குப் பிறகு தொடக்கநிலை தடுமாற்றத்திலிருந்து மீண்ட லிரென், முன்னேற்றம் காட்டினாா். குகேஷ் பின்னடைவை சந்தித்தாா். அடுத்தடுத்து காய்களை நகா்த்துவதற்கு அவா் அதிக நேரம் எடுத்துக்கொண்டாா்.

மொத்தம் 42 நகா்த்தல்களுக்குப் பிறகு லிரென் வெற்றி உறுதியாக, குகேஷ் தோல்வியை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து லிரென் 1-0 என முன்னிலையில் இருக்கிறாா்.

அடுத்ததாக 2-ஆவது சுற்று, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் லிரென் வெள்ளை நிற காய்களுடனும், குகேஷ் கருப்பு நிறத்துடனும் மோதவுள்ளனா். இந்தப் போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டுபவா், சாம்பியனாக முடிசூட்டப்படுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்

சாகர் கவாச்: கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவலர்கள்!

பிகார் முதல்வராக முதல் முறை பதவியேற்ற நிதீஷ் குமார் ஒரே வாரத்தில் பதவியிழந்தது ஏன்?

இது என்னுடைய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ்

SCROLL FOR NEXT