முகப்பு
செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்.. சில வரிகளில்..!!

Updated On : 14 அக்டோபர், 2024 at 9:38 PM
பென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்)
பகிர்:
  • மத்திய அரசால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு தேசிய விளையாட்டு மசோதா, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பாராலிம்பிக் கமிட்டி, அனைத்து தேசிய சம்மேளனங்கள் ஆகியவற்றில் 30 சதவீத மகளிர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

  • நுழைவு இசைவுக்கான ஆவணங்கள் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தில்லியில் இம்மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் நேதன் ஹேல் உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்கள் சிலர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • பாகிஸ்தானுக்கு எதிரான 2}ஆவது டெஸ்ட் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில், காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அந்த ஆட்டத்தில் களம் காண்கிறார்.

    Advertisement

  • பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், ஷான் அப்பாட், கூப்பர் கானலி, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸôம்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

  • பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்கும் டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டி, செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

  • ஹாக்கி இந்தியா லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்துக்கு சூர்மா ஹாக்கி கிளப்பால் வாங்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments