நோவக் ஜோகோவிச் 
செய்திகள்

100ஆவது பட்டத்துக்கான காத்திருப்பு..! பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகிய ஜோகோவிச்!

செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

DIN

செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் இதை ஜோகோவிச் அறிவித்தார். அதில் கூறியதாவது:

இந்தாண்டு நடைபெறும் ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸில் நான் கலந்துகொள்ளவில்லை. நான் விளையாடுவேன் என எதிர்பார்த்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். மற்ற வீரர்கள், ரசிகர்கள், போட்டியை நடத்துபவர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள்.

பாரீஸ் மாஸ்டர்ஸில் 7 பட்டங்கள் வெற்றிபெற்று மிகவும் சிறந்த நினைவுகளுடன் இருக்கிறேன். அடுத்தாண்டு விளையாடுவேன் என்றார்.

தொடரும் 100ஆவது பட்டத்துக்கான காத்திருப்பு

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 100ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவாரா என ஜோகோவிச் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றும் அசத்தினார் நோவக் ஜோகோவிச். 37 வயதாகும் ஜோகோவிச் 37-9 வெற்றி - தோல்வி என இந்த சீசனில் அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் -24

ஏடிபி பைனல்ஸ் - 7

ஏடிபி 1000 - 40

ஏடிபி 500 - 15

ஏடிபி 250 - 12

ஒலிம்பிக்ஸ் -1

மொத்தமாக 99 பட்டங்களை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT