பிரண்டன் மெக்கல்லம் 
செய்திகள்

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயிற்சியாளரான நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 2027ஆம் ஆண்டு வரை அவர் இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடுகளால், தலைமைப் பயிற்சியாளர் மேத்யூ மோட் ஜூலை 30 அன்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியதால், துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர்களுக்கான தேடுதலில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று தந்த இந்தியாவின் ராகுல் டிராவிட், இலங்கையின் சங்கக்கரா, இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன் கூட இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை குரூப் போட்டிகளில் 9-ல் 6-ல் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

ஜூன் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இறுதியில் சாம்பியனான இந்தியாவிடம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT