சச்சின் கிலாரி 
செய்திகள்

குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சச்சின் கிலாரி!

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

DIN

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிளாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரான்ஸ் தலைகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி 28 ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று (செப்.4) நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

எஃப் 46 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சச்சின் கிலாரி 16.32 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட்16.38 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

குண்டு எறிதலில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது 30 ஆண்டுகால பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இ-செலான் மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

மருத்துவக் கல்வி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனம்: அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு

மழை - வெள்ளம் பாதித்த நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு உதவ தில்லி பாஜக ஆலோசனை

SCROLL FOR NEXT