ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி மிகவும் சிறப்பானது: ஹர்மன்பிரீத் சிங்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் சிறப்பானது என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் சிறப்பானது என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் அண்மையில் நிறைவடைந்தது. அதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
மிகவும் சிறப்பான வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிக்குப் பிறகு மிகவும் நன்றாக உணர்கிறோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த தொடருக்காக தயாராக எங்களுக்கு போதிய நேரம் இருக்கவில்லை என்றார்.