கிண்டல்களுக்கு பதிலளித்த மனு பாக்கர். 
செய்திகள்

கிண்டல்களுக்குப் பதிலளித்த மனு பாக்கர்!

பாரீஸில் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் தன் மீதான் கிண்டல்களுக்கு பதிலளித்துள்ளார்.

DIN

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.

மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் மனு பாக்கரை கிண்டல் செய்து வந்தனர். எங்கு சென்றாலும் இந்தப் பதக்கங்களுடன் செல்வதா என சிலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக தனது எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கர் கூறியதாவது:

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் வென்ற இரண்டு வெண்கல பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. எப்போதெல்லாம் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து, பதக்கங்களைக் காண்பிக்க சொல்கிறார்களோ அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமையுடன் காண்பிப்பேன். இது என்னுடைய அழகான பயணத்தைப் பகிரும் ஒரு வழிமுறையாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT