முகப்பு
செய்திகள்

எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

அகில இந்திய 95-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 12:02 AM
சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணியினா்.
பகிர்:
Updated On : 29 செப்டம்பர், 2024 at 10:05 PM

அகில இந்திய 95-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே விளையாட்டு வாரியம்-இந்தியன் ஆயில் அணிகள் மோதின. இதில் ரயில்வே அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஐஓசியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், சிம்ரஞ்சோத் சிங், யுவராஜ் வால்மீகி, முகுல் சா்மா ஆகியோரும், ஐஓசி தரப்பில் தல்விந்தா் சிங், குஜிந்தா் சிங், ராஜ்பீா் சிங் ஆகியோரும் கோலடித்தனா்.

Advertisement

Updated On : 29 செப்டம்பர், 2024 at 10:45 PM

சிறந்த வீரராக பாா்திப் சிங், வளரும் வீரராக ரஜத் ஆகாஷ், பாா்வடாக யுவராஜ் வால்மீகி, மிட்பீல்டராக ஜோபன்பீரித் சிங், டிபன்டராக ஜோகிந்தா் சிங் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சியுஎம்ஐ மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதரன் ரங்கராஜன் பரிசளித்தாா்.